72nd Independence Day Celebrations at ICF/ஐசிஎஃப்பில் 72வது சுதந்திர தின விழா

PERAMBUR: 72nd Independence Day was celebrated at ICF today (15.08.2018) with patriotic fervour.  Sri S. Mani, General Manager, ICF,unfurled the National Flag in the presence of Sri S.C. Parhi, Principal Chief Security Commissioner, ICF, other officers and staff of ICF, and accepted the Guard of Honor by the RPF contingents. The RPF Parade was commanded by Sri Sandeep Kumar Parashar, Inspector/RPF/ICF, follwed by Platoon Commanders Sri Ramakrishnan, Sub-Inspector and Sri Ranjith Singh, Sub-Inspector.

Watch the Video of GM Inspecting the Guard of Honor here!

While addressing the gathering, GM reminisced the great sacrifices by our great leaders for freedom and restoring the fundamental rights. He expressed his happiness that ICF has made a remarkable achievement by producing 2503 coaches during last production year 2017-18, that is 226 coaches more than previous year and 39 coaches more than the target fixed by Railway Board including many new coaches such as AC 3 Tier, LHB coaches with continuous window, first stainless steel bodied MEMU with three phase on board electrics, etc.

He also mentioned that ICF has been a front runner in eco-preservation and has achieved carbon negative status by many innovative steps including installation of Integrated Waste Management System, Green house, Poly house etc. making ICF the only organization in Indian Railways to do so. He also recalled that ICF successfully hosting the first ever International Rail Coach Expo, with participation by 82 exhibitors of 12 countries.

He said that shortly ICF would be turning out its flagship train set code-named “Train 18” with state of art features, 78  three phase DEMUs for export to Sri Lanka, and 1600 HP Airconditioned DEMU with under slung electrics.

A large number of ICF Staff, Officers and Staff representatives were present on the occasion.

ஐசிஎஃப்பில் 72வது சுதந்திர தின விழா

ஐசிஎஃப்பில் 72வது சுதந்திர தின விழா இன்று (15.08.2018) கொண்டாடப்பட்டது. ஐசிஎப் பொதுமேலாளர் திரு எஸ். மணி அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து ரயில்வே பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஐசிஎப் ரயில்வே பாதுகாப்புப்படை தலைமை ஆணையர் திரு எஸ்.சி. பாரி, மற்றும் ஐசிஎப் அதிகாரிகள் ஊழியர்கள் முன்னிலையில் ஏற்றுக் கொண்டார். அணிவகுப்புக்கு ஐசிஎப் ரயில்வே பாதுகாப்புப்படை ஆய்வாளர் திருசந்தீப் குமார் பராஷர் தலைமை வகித்தார்.

விழாவில் பேசுகையில் திரு மணி அவர்கள் இந்தியாவின் மாபெரும் தலைவர்கள் நமது தாய்நாட்டை அந்நியர்களிடம் இருந்து விடுவித்து நமது அடிப்படை உரிமைகளை மீட்டுத்தந்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். மேலும் அவர் பேசுகையில், கடந்த ஆண்டில் (2017-18) ஐசிஎப் முதன்முறையாக 2503 ரயில்பெட்டிகளை தயாரித்து சாதனை புரிந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த்துடன் இது கடந்த ஆண்டைவிட 226 ரயில்பெட்டிகள் அதிகம் என்றும் ரயில்வே வாரியம் நிர்ணயித்த இலக்கை விட 39 ரயில்பெட்டிகள் அதிகம் என்றும் தெரிவித்தார்.  கடந்த ஆண்டில் முதன்முறையாக தொடர்ஜன்னல் கண்ணாடிகள் கொண்ட குளிர்வசதி செய்யப்பட்ட மூன்றடுக்கு படுக்கை வசதி எல்எச்பி ரயில்பெட்டிகள், ஸ்டெயின்லஸ் ஸ்டீல் கொண்டு செய்யப்பட்ட மும்முனை நேர் மின்சக்தியால் இயங்கும் நெடுந்தொலைவு மின்தொடர் வண்டி, போன்றவை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த கழிவுப்பொருட்கள் மேலாண்மைக்கூடம், பசுமைக்குடில் போன்றவைகளை இந்திய ரயில்வேயிலேயே முதன்முறையாக நிறுவி ஐசிஎப் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் ஐசிஎப் முன்னணியில் இருப்பதாக சொன்ன திரு மணி, 12 நாடுகளில் இருந்து வந்திருந்த 82 நிறுவனங்கள் பங்கேற்ற பன்னாட்டு ரயில்பெட்டிகள் தொழில்நுட்பக்  கண்காட்சியை ஐசிஎப் வெற்றிகரமாக நடத்தி முடித்ததையும் குறிப்பிட்டார்.

மேலும் ஐசிஎப் விரைவிலேயே இந்தியாவில் முதன்முறையாக அதிநவீன வசதிகள் கொண்ட ரயில்பெட்டித்தொடரான டிரெயின் 18 ரயில்தொடர், இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கான 78 மும்முனை டீசல் மின்தொடர் ரயில்பெட்டிகள், 1600 எச்பி சக்தி கொண்ட குளிர்வசதி செய்யப்பட்ட மின் தொடர் வண்டிகள் ஆகியவற்றை தயாரித்தனுப்ப உள்ளதாக குறிப்பிட்டார்.

இவ்விழாவில் ஐசிஎப் ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர் பிரதிநிதிகள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail